ஒருவருக்குக்கும் தீமைக்கு தீமை செய்யாமல் இருப்போம்.. முடிந்த வரை நன்மை செய்வோமாக
கதை:
ஒரு மண்டபத்தில் ஒரு
சொற்பொழிவாளர்,
சொற்பொழிவு ஆற்றி கொண்டு
இருந்தார்.
அந்த சொற்பொழிவாளர்
பேச்சை பிடிக்காத அந்த
கூட்டத்திலிருந்த ஒரு மனிதர்,
அவர் மீது கல் ஒன்றை
எடுத்து எறிந்தார்.
அங்கிருந்த சக மனிதர்கள் அந்த
மனிதரை பிடித்து, அடித்து, பின்பு அந்த
சொற்பொழிவாளரிடம் கொண்டு
சென்றனர். அப்பொழுது அந்த
சொற்பொழிவாளர், அவரை
அடிப்பார் என்று மக்கள்
நினைத்தனர்.
ஆனால் அவரோ, தன்னிடம் இருந்த
பழங்களை கல்லெறிந்த மனிதரிடம்
சாப்பிடும்படியாக கொடுத்தார்.
நடந்துகொண்டார். இதை பார்த்த
சக மக்கள் அவரிடம் கேட்டனர்.
இந்த மனிதன் மேல் உங்களுக்கு
கோவம் இல்லையா?என்று
கேட்டனர்.
அதற்கு அந்த சொற்பொழிவாளர்,
“ஓரறிவு உடைய மரமானது தன்மீது
கல் எறிபவனுக்கு பழத்தைத்
தருகிறது. ஆறறிவு உடைய நான்
எனக்கு துன்பம்
செய்தவனுக்கு ஏதேனும் நன்மை
செய்ய வேண்டாமா?”
அந்த சொற்பொழிவாளர்
சொல்லியதை கேட்ட
அந்த மனிதர், உடனே கலங்கி அழுது
மன்னிப்பு கேட்டான்.
நமக்கு ஒருவர் தீமை செய்தாலும் அவர்களுக்கு நாம்
நன்மையை மட்டுமே செய்ய
வேண்டும்.
வேதாகமத்தில் ஒரு
மத்தேயு 5: 44 (Matthew 5:44)
இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் ,
உங்கள் சத்துருக்களை
சிநேகியுங்கள்;
உங்களைச் சபிக்கிறவர்களை
ஆசீர்வதியுங்கள்;உங்களைப்
பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்யுங்கள்; உங்களை
நிந்திக்கிறவர்களுக்காகவும்
உங்களைத்
துன்பப்படுத்தியவர்களுக்காகவும்
ஜெபம் பண்ணுங்கள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண
நன்னயம் செய்து விடல்
திருக்குறளின் விளக்கம்
தீமை செய்தவர்களுக்கு தீமை
செய்யாமல்,
அவர் வெட்கப்படும்படியாக,
நன்மை செய்யுங்கள்
என்பதே !
நமக்கு தீமை செய்தவர்களுக்கு தீமை செய்யாமல்
அவர்களுக்கு நன்மை செய்வோமாக.
0 Comments