என்ன பரிசு வேண்டும் ?
பிரான்ஸ் நாட்டின் தலை நகர், பாரிஸ் மாநகரில் ஒரு பயங்கர
வெடிவிபத்து நடந்தது.
குற்றவாளிகள் தப்பித்துவிட, பாரிஸ் மாநகர காவல்துறை
தடயங்கள் ஏதுமின்றி
தடுமாறிப்போனது. இறுதியில் ஒரே ஒரு நாய் மட்டும்
சிக்கியது. அதை வைத்து தடயம்
அறிய காவல்துறை முயற்சித்தது. இவர்கள் பேசி பார்த்த,
எந்த மொழியும்
நாய்க்கு புரியவில்லை. இன்னும் தீவிரமாக பல நிபுணர்கள்
முயற்சிகள் மேற்கொண்டனர்.
முடிவில் 60 மொழிகள் படித்திருந்த ஓர் அறிஞரை கண்டுபிடித்து , அவரை அந்த நாயுடன்
பேச வைத்தனர். அவரும் ஒவ்வொரு மொழியாக பேசி பார்த்தார் .
எந்த மொழிக்கும்,
அந்த நாய் சாதகமான பதில் தரவில்லை. கடைசியா ஹீப்ரு மொழியில் இவர்
பேசிப்பார்க்க ,
நாய் அற்புதமாக பதில் தந்தது. அதன் மூலம் துப்பு துலங்கியது.
பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகளும், காவல்துறையினரும் மிகவும் மகிழ்ந்தார்கள். .
ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, உதவிய அந்த மொழி அறிஞரை அழைத்து
கவுரவித்தனர். அதிகாரிகள் “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? கேளுங்கள்”!
அதை நாங்கள் தருகிறோம். மாளிகையா ? ரொக்க பணமா? அரசு உதவிகளா?
விலை உயர்ந்த கார்களா? என்ன வேண்டும் கேளுங்கள் என்றனர். அந்த அறிஞர்,
அவர்கள் அறிவித்த எந்த பரிசு பொருட்களிலும் திருப்தி அடையாதவராய் சொன்னார்,
எனக்கு அந்த நாய் மட்டும் தந்து விடுங்கள். அதிகாரிகள், இந்த நாயை வைத்து
நீங்கள் என்ன சாதித்து விடப்போகிறீர்கள் ? என்று கேட்டனர்.
அதற்கு அந்த அறிஞர், இந்த நாயை, நான் கொண்டுபோய் என் மனைவி முன் நிறுத்தணும்.
ஏன்னா, நான் கஷ்டப்பட்டு பற்பல மொழிகளை படிக்கும் போதெல்லாம் என் மனைவி
"இவ்வளவு கஷ்டப்பட்டு இதையெல்லாம் படிக்கிறீர்களே, இதையெல்லாம் எந்த நாய்
கேட்கப்போகுதுன்னு பரியாசம் செய்வாள் ...
ஒரு மனிதனுக்கு பொன் பொருள், பணத்தை விட தன்மானம் முக்கியம்.யாரையும்
கேவலமாக எடைபோடாதீர்கள் என்றார்.
0 Comments