அம்மாவை பிரிந்த ஒரு சிறுவனின் வலி

எனது பெயர் யோசுவா.  என் அம்மா ஒரு மிகப்பெரிய மென்பொறியாளர் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். எனது அப்பா ஒரு வக்கீல். என் அப்பா மிக பெரிய குடிகாரர். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அம்மாவை தினமும் அடிப்பார். அம்மாவின் பணத்தை எல்லாம் பிடுங்கி சென்றுவிடுவார். அடிக்கடி வீட்டில் சண்டை நடக்கும். எனக்கு என் அப்பாவை பார்த்தாலே பயம்.. எனக்கு நான்கு வயது நடந்து கொண்டிருந்தது. என் அம்மாவுக்கு வேலை அதிகமாக இருக்கும். காலையில் எங்களுக்கு தேவையான சாப்பாட்டை செய்து விட்டு ஆபீஸ்க்கு போய்விடுவாள்.. இரவு 7 மணிக்குத்தான் வீட்டிற்கு வருவாள். அவளுக்காக நான் காத்துக்கொண்டிருப்பேன். வீட்டுக்கு வந்து எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அவள் செய்து முடிக்கவே  இரவு  பதினோரு மணி ஆகிடும். இப்படியே போய்க்கொண்டிருந்த காலத்தில், என் அம்மாவுக்கு வேலையில் டென்ஷன் அதிகமாகவே அவள் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டாள். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். ஒரு நாள், வழக்கம் போல சண்டை நடந்தது. வழக்கம் போலத்தானே அப்பா, அம்மாவை திட்டுவார், அம்மா அழுவாள். நான் போய்  சமாதானப்படுத்தலாம்னு என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அன்றைக்கு  அது மிகப்பெரிய சண்டையாக மாறியது. நான் பயந்து, சண்டையை பார்த்து கொண்டிருந்தேன். என் வாழ்க்கையை அன்றே புரட்டி போட்ட நிகழ்வு. ஆம்| என் அப்பா, அம்மாவை அடித்து வெளியே துரத்தினார். அம்மாவை அடிக்கும் பொழுது என்னால் தடுக்க முடியவில்லை. ஏனென்றால், எனக்கு நான்கு வயது. என் அப்பா என்றால் எனக்கு பயம். என் அம்மாவை ரத்தம் சொட்ட சொட்ட வெளியே அடித்து விரட்டினார். இன்றும் அதை நினைக்கும் பொழுது என் மனம் கலங்குகிறது. என் அம்மா, என்னை தருமாறு கேட்டதற்கு என் அப்பா தர மறுத்து விட்டார். என் அம்மா அழுது கொண்டே என் பாட்டி வீட்டுக்கு சென்றாள். நானும் என் அம்மாவும் பிரிந்தோம். அன்றைய இரவு  என் அம்மவோட அரவணைப்பை இழந்தேன். ஆனாலும் என்ன பயன் ? என் அப்பாவிடம் அம்மா வேண்டும் என்று கேட்டால், என்னை கொன்றுவிடுவார் என்ற பயத்தில், அப்பாவுடன் வாழ பழகினேன். எனக்கு பசிக்கும் பொழுது எல்லாம் என் அம்மாவை நினைப்பேன், ஏனென்றால், என் அப்பா நல்லா குடித்துவிட்டு தூங்கிடுவார். எனக்கு சாப்பாடு????அதை பற்றி யோசிக்கவே மாட்டார். தினமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வந்தேன். எனது வயிறு  புண்ணாகியது. ஒரு நாள் எனக்கு மிகவும் பசியாக இருந்தேன். என் அப்பாவிடம் சாப்பாடு கேட்டேன் அவரோ, முழு போதையில் இருந்தார். யாரிடமோ சாப்பாடு வாங்கிவர சொல்லி இருக்கிறார். சிறிது நேரத்தில் ஜன்னலில் யாரோ சாப்பாடு வைப்பது போல் இருத்தது. நான்  உடனே ஓடி சென்று எடுத்து சாப்பிட்டேன்.. என் கண்களில் இருந்து கண்ணீர் வழித்தோடியது. ஏனென்றால் அவ்வளவு காரம். நான் இதுவரைக்கும் காரமான சாப்பாடு சாப்பிட்டது இல்லை.வேற வலி இல்லாமல் சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் என் அப்பா வாந்தி எடுத்தார். என்னசெய்வது என்று எனக்கு தெரியவில்லை. நானோ சிறுபிள்ளையாக இருக்கிறேன். வேற என்ன செய்வது நான்தான் துடைக்க வேண்டும். அதையும் செய்தேன். ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வீட்டு வேலை செய்ய பழகினேன்.. நான் எப்படி இருக்கிறேன் என்று ஒரு நாள் என் அம்மா பார்க்க வந்தார். ஆனால் அப்பா பார்க்கவே விடல. அம்மாவை கட்டி அணைத்து கொண்டு அம்மாவோடு  போக எனக்கு ஆசை. ஆனால் கனவில் நடக்கலாம்.. நிஜத்தில் ???? அம்மாகூட, போனில் பேச கூட விட மாட்டார். எனக்கு தெரியும் என் தாய், என்னை போல அங்கு தவித்து கொண்டிருப்பாள் என்று.... ஒரு நாள் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. என் அம்மாவின் போன் நம்பரை ஒரு டைரியில் எழுதிய ஞாபகம் வந்தது. என் அப்பா தூங்கிய நேரத்தில் என் அம்மாவோடு பேச ஆரம்பித்தேன்.. நான் சிறுபிள்ளையாக இருந்ததால், போனிலே அம்மாவோடு விளையாடுவேன். என் அம்மா என்னைய ஸ்கூலில் வந்து பார்க்க ஆரம்பித்தாள். வரும் பொழுது சமைத்து எடுத்து வருவாள். ஊட்டி விடுவாள். என்னுடைய கெட்ட நேரம், லஞ்ச் டைம் அரைமணிநேரம் மட்டுமே. அவளோடு இருக்க வேண்டும் என்று எனக்கு தோணும். ஆனால் முடியாது. லஞ்ச் டைம் முடிந்ததும் இருவரும் பிரிய மனதில்லாமல் பிரிந்து சென்றோம். நான் ஒரு சூழ்நிலைக்கைதியாகவே இருந்தேன். அப்பா வக்கீலாக இருந்ததால், உன் மீது பொய்யான வழக்குகளை போட்டு விடுவேன் என்றும், இனிமே ஸ்கூலில் என்னை வந்து பார்க்க கூடாதென்றும்,  என் அம்மாவை மிரட்டினார். அப்படி இருந்தும் அவள் என்னை   பார்க்க வருவாள்.   ஸ்கூலுக்கு அவர் கொண்டு விட்டால் போவேன். காலப்போக்கில்   எனக்கு என் அப்பா மீது வெறுப்பு வர தொடங்கியது. ஸ்கூலில் எத்தனை அப்பாக்களை பார்க்கிறேன். எல்லாரும் தன் பிள்ளைகளை தோளில் சுமந்து செல்கிறார்கள். ஆனால் என் அப்பாவோ.???... எத்தனை பேர் அம்மா, அப்பாவாக வந்து பிள்ளைகளை அழைத்து செல்கிறார்கள் ஆனால் என் அப்பாவோ??? அப்படி இல்லை. வெறுப்பாக என் வாழ்கை நகர்ந்தது. ஸ்கூல் போவதையும் என் அப்பா நிறுத்தினார். என் படிப்பு நின்றது.என் அப்பாவை தவிர, என் தாத்தா, என் பாட்டி, என் அத்தை எல்லாரும் நல்லவர்கள். என் நிலைமையை அறிந்த அவர்கள், ஒரு நாள் என் அம்மாவிடம் என்னை ஒப்படைத்தனர். என் அப்பா மிகவும் எதிர்த்தார். பெரும்பாடுகளுக்கு பிறகு என்னை என் அம்மாவிடம் கொடுத்தனர். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அவ்வளவு சந்தோஷப்பட்டேன். அம்மாவிடம் வந்த பிறகு என் உடல்நிலை தேறியது. இன்று நல்ல சுகத்துடன் இருக்கிறேன். இப்பொழுது சந்தோசமாக பள்ளிக்கூடம் செல்கிறேன். நான் கிறிஸ்துவ பிள்ளை என்பதால், என் ஆண்டவரிடம்  , என்னை போல குடிகார அப்பாக்களிடம் மாட்டி கொண்டு தவிக்கும் அம்மாவையும், பிள்ளைகளையும் காப்பாத்துங்க ஆண்டவரே என்று தினமும் மன்றாடுவேன். ஏன் என்றால் எனக்கு அந்த வலி புரியும். பரிசுத்த வேதாகமத்தில், திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே என்று ஆண்டவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைக்கும் எனக்கு சகாயம் செய்த ஆண்டவர் கஷ்ட படும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கிருபை செய்ய வேண்டும் என்று அனுதினமும் பிராத்திக்கிறேன்.